search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக்குக்கு உத்தப்பா பாராட்டு
    X

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக்குக்கு உத்தப்பா பாராட்டு

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்படும் தினேஷ் கார்த்திக்குக்கு உத்தப்பா பாராட்டு தெரிவித்துள்ளார்.#KKR
    ஐபிஎல் தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வாங்கிய அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரண்டு முறையும் கேப்டனாக இருந்தவர் கவுதம் காம்பீர். தற்போது காம்பீர் டெல்லி அணிக்கு கேப்டனாக உள்ளார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டார். காம்பீரை போல் தினேஷ் கார்த்திக் செயல்படுவாரா? என்ற கேள்வி எழும்பியது. அதேவேளையில் தினேஷ் கார்த்திக் உடன்  உத்தப்பாவும் கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. உத்தப்பா 36 பந்தில் 48 ரன்னும், தினேஷ் கார்த்திக் அவுட்டாகாமல் 23 பந்தில் 42 ரன்களும் அடித்தனர்.



    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படுகிறார் என்று உத்தப்பா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறுகையில் ‘‘கவுதம் காம்பீர், தினேஷ் கார்த்திக் மிகவும் மாறுபட்ட பெர்ஷனாலிட்டிஸ். தினேஷ் கார்த்தில் ஏராளமான தகவல் குறித்து யோசனை செயவார். அதேநேரம், வீரர்கள் அறையில் இருந்து கேப்டனாக மைதானத்திற்குள் களம் இறங்கியதும், அவருடைய செயல்திறனும், எடுக்கும் முடிகளும் சிறப்பான இருக்கிறது’’ என்றார்.
    Next Story
    ×