search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இருபது ஓவர் போட்டி இல்லையெனில் கிரிக்கெட் இல்லை- கங்குலி
    X

    இருபது ஓவர் போட்டி இல்லையெனில் கிரிக்கெட் இல்லை- கங்குலி

    டி20 கிரிக்கெட் இல்லையெனில் கிரிக்கெட் இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். #TeamIndia #Ganguly
    கோவையில் இன்று சர்வதேச கண் டாக்டர்கள் மாநாடு தொடங்கியது. இதையொட்டி கண் விழிப்புணர்வு ‘வாக்கத்தான்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி கொடியசைத்து தொடங்கி வைத்து 2 கிலோமீட்டர் நடந்து சென்றார்.



    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கங்குலி கூறுகையில் ‘‘கிரிக்கெட்டிற்கு டி20 கிரிக்கெட் மிகவும் முக்கியமானது. டி20 கிரிக்கெட் இல்லாமல் கிரிக்கெட் இல்லை. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, நாளைய கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் டோனி மிகச்சிறந்த வீரர். அவர் சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம்’’ என்றார்.
    Next Story
    ×