என் மலர்
நீங்கள் தேடியது "Twenty20"
- கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எந்தக் கூட்டணியிலும் சேராமல் தனித்து இயங்கி வந்தது டுவென்டி20 கட்சி
- முன்னாள் எம்.எல்.ஏ ஏ.வி. தாமரக்ஷன் தலைமையிலான ஜனதிபத்ய சம்ரக்ஷண சமிதி பிரிவும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளது
கேரளாவின் கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சாபு எம். ஜேக்கப் தலைமையிலான 'டுவென்டி 20' கட்சி, அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. நாளை பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ள நிலையில் இந்த கூட்டணி இறுதியாகி உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருடன் ஜேக்கப் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு, இந்த முடிவை இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தனர்.
கேரளாவில் நிலவும் "தவறான நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு" மாற்றாகவும், மோடி அரசின் வளர்ச்சித் திட்டங்களுடன் இணைந்து "வளர்ந்த கேரளா" என்ற இலக்கை அடையவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சாபு ஜேக்கப் தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எந்தக் கூட்டணியிலும் சேராமல் தனித்து இயங்கி வந்த டுவென்டி20 கட்சி, முதன்முறையாக ஒரு முன்னணியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இது குறிப்பாக எர்ணாகுளம் மற்றும் மத்திய கேரள மாவட்டங்களில் தேர்தல் களத்தை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டுவென்டி20 கட்சியுடன் இணைந்து, முன்னாள் எம்.எல்.ஏ ஏ.வி. தாமரக்ஷன் தலைமையிலான ஜனதிபத்ய சம்ரக்ஷண சமிதி பிரிவும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






