search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொந்த மண்ணில் 2-வது முறையாக மோசமான தோல்வியை சந்தித்த தென்ஆப்பிரிக்கா
    X

    சொந்த மண்ணில் 2-வது முறையாக மோசமான தோல்வியை சந்தித்த தென்ஆப்பிரிக்கா

    ஆஸ்திரேலியாவிற்கு பிறகு தற்போது இந்தியாவிடம் 2-வது முறையாக 5 போட்டிகளை இழந்து தென்ஆப்பிரிக்கா மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. #SAvIND
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இந்தியா அபாரமாக விளையாடி 5-1 எனத் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. தென்ஆப்பிரிக்கா அணியால் எந்த வகையிலும் இந்தியாவிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மழையால் 28 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஜோகன்னஸ்பர்க் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.

    முதன்முறையாக தென்ஆப்பிரிக்கா மண்ணில் தொடரைக் கைப்பற்றி இந்தியா சாதனைப் படைத்த நிலையில், தென்ஆப்பிரிக்கா மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் சொந்த மண்ணில் 2-வது முறையாக 5 போட்டிகளை இழந்துள்ளது.



    ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா கடந்த 2002-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா மண்ணில் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலியா 5-1 என தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்தது. அதன்பின் தற்போது 16 ஆண்டுகள் கழித்து தென்ஆப்பிரிக்கா 1-5 என இந்தியாவிடம் தோல்வியடைந்து பரிதாபத்திற்குள்ளாகியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் முதல் போட்டிக்குப் பிறகும், குயின்டான் டி காக் முதல் இரண்டு போட்டிகளுக்குப் பிறகும் தொடரில் இருந்து விலகினார்கள். டி வில்லியர்ஸ் முதல் மூன்று போட்டிகளிலும் காயத்தால் பங்கேற்கவில்லை. #SAvIND
    Next Story
    ×