search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பு
    X

    இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பு

    இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க உள்ளது. இதனால் உலக கோப்பை போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
    புவனேஸ்வரம்:

    14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நவம்பர் 28-ந் தேதி முதல் டிசம்பர் 16-ந் தேதி வரை நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த (2014) உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெறாத 4 முறை சாம்பியனான பாகிஸ்தான் அணி, லண்டனில் நடந்த உலக ஹாக்கி லீக் அரை இறுதி சுற்றில் 7-வது இடம் பிடித்ததுடன், ஐரோப்பிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி முடிவுகள் அந்த அணிக்கு சாதகமாக முடிந்ததாலும் 13-வது அணியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

    பாகிஸ்தான் தகுதி பெற்று பங்கேற்க இருப்பதால் உலக கோப்பை போட்டி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது. பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக நெதர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகள் 3 முறை உலக கோப்பையை உச்சி முகர்ந்துள்ளன. இந்திய அணி ஒரே ஒரு முறை (1975-ம் ஆண்டு) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. #tamilnews
    Next Story
    ×