என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பும்ராவின் வேகம் மற்றும் துல்லியம் என்னை ஈர்த்தது: ஆலன் டொனால்டு
Byமாலை மலர்22 Jan 2018 11:54 AM GMT (Updated: 22 Jan 2018 11:54 AM GMT)
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் வேகம் மற்றும் துல்லியமான பந்து வீச்சு என்னை ஈர்த்தது என ஆலன் டொனால்டு புகழ்ந்துள்ளார். #SAvIND #Bumrah
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கேப் டவுன் மற்றும் செஞ்சூரியனில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியா முறையே 72 மற்றும் 135 ரன்களில் தோல்வியடைந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையிலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நான்கு இன்னிங்சிலும் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.
பும்ரா தனது அபார பந்து வீச்சால் இரண்டு டெஸ்டிலும் அசத்தினார். இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு பும்ராவின் பந்து வீச்சை புகழ்ந்துள்ளார்.
பும்ரா பந்துவீச்சு குறித்து ஆலன் டொனால்டு கூறுகையில் ‘‘இந்தியாவின் வேகப்பந்து வீச்சைப் பற்றி பேசுவதற்கு பும்ராதான் முக்கிய காரணம். அவரது பந்து வீச்சு என்னை ஈர்த்தது. புதிய பந்தில் வேகம் மற்றும் துல்லியமான பந்து வீச்சால் மாயாஜாலம் காட்டினார். 2-வது டெஸ்டில் இருந்து புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டதை கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்’’ என்றார்.
கேப் டவுன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் டி வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா, 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். செஞ்சூரியன் டெஸ்டில் முதல் இன்னிங்சில் விக்கெட் வீ்ழ்த்தாத பும்ரா, 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். #SAvIND #Bumrah

Next Story
×