search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரர்களை நிர்வகிப்பதில் கும்ப்ளே தவறிவிட்டார்: பல்விந்தர் சிங் சந்து சொல்கிறார்
    X

    வீரர்களை நிர்வகிப்பதில் கும்ப்ளே தவறிவிட்டார்: பல்விந்தர் சிங் சந்து சொல்கிறார்

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருந்த வீரர்களை நிர்வகிப்பதில் தலைமை பயிற்சியாளரான அனில் கும்ப்ளே தவறிவிட்டார் என்று பல்விந்தர் சிங் சந்து கூறியுள்ளார்.
    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குச் செல்லும் முன்பு கும்ப்ளேவிற்கும், விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரது தலைமை பயிற்சியாளர் பதவியை நீட்டிப்பதில் சறுக்கல் ஏற்பட்டது. சச்சின் தெண்டுல்கர், கங்குலி, லஷ்மண் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை கும்ப்ளேவை பதவில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டது.

    இந்த நிலையில் நேற்று அனில் கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகினார். 1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்படித்திருந்தவர் பல்விந்தர் சிங் சந்து. இவர் கும்ப்ளே விவகாரம் குறித்து கூறுகையில் ‘‘கும்ப்ளே வீரர்களை நிர்வகிப்பதில் தவறிவிட்டா்’’ என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து பல்விந்தர் சிங் சந்து கூறுகையில் ‘‘பெரும்பாலான வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமி மூலம் மாநில பயிற்சியாளர்கள் முன்னிலையில் வளர்ச்சி பெறுகிறார்கள். தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் ரஞ்சி டிராபியில் இடம்பிடித்த பின்னர் இந்திய அணிக்கு திரும்புகிறார்கள். ஆகவே, மாநில பயிற்சியாளர்கள் மூலம் கடுமையான பயிற்சிகளை வீரர்கள் மேற்கொண்டுள்ளனர்.

    யுக்தி, ஆட்டத்தை எப்படி கையாள்வதை என்பதை தவிர அணியின் வீரர்களை திறமையாக நிர்வகிப்பதுதான் தலைமை பயிற்சியாளரின் முக்கிய வேலை. இதில் கும்ப்ளே தவறிவிட்டார்.

    கும்ப்ளே தலைமையில் ஏராளமான தொடர்களை வென்றுள்ளோம் என்று கூறுகிறோம். திறமையான வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் ரஞ்சி டிராபி தொடரில் இருந்து வரும்போது, அவரது திறமையை வீரர்களை நிர்வகிப்பதை வைத்துதான் எடைபோட வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×