search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமாஜ்வாதி உடனான கூட்டணி முறிவு: மாயாவதி அதிரடி
    X

    சமாஜ்வாதி உடனான கூட்டணி முறிவு: மாயாவதி அதிரடி

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
    லக்னோ:

    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அதீத பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது. உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 15 இடங்களில் மட்டுமே இந்த கூட்டணி வெற்றி பெற்றது.

    இதனையடுத்து பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் பரவின.



    இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக மாயாவதி அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், “உ.பி.யில் எதிர்வரும் 11 தொகுதி இடைதேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும். சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி முறிவு நிரந்தரமானது அல்ல. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் இணைவோம்” என அறிவித்துள்ளார்.
    Next Story
    ×