search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகுஜன் சமாஜ்"

    • பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் இன்று நடந்தது.
    • இதில் மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்துள்ளார்.

    லக்னோ:

    உத்தரப் பிரதேச முன்னாள் முதல் மந்திரியான மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாயாவதி தனது அரசியல் வாரிசை அறிவித்தார்.

    இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான உதய்வீர் சிங் கூறுகையில், மருமகன் ஆகாஷ் ஆனந்தை அவர் அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்தது.
    • ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.

    இதற்கிடையே, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் இருவரும் பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவினை திரட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநில தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். #Mayawati
    லக்னோ:

    2019 பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டு பா.ஜ.கவை எதிர்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் பெரும் பொறுப்பு காங்கிரஸ் கட்சியின் கையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    2019 தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. 

    பா.ஜ.க. ஆட்சியில் உள்ள சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரசுடன் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியை தொடங்கிய அஜித் ஜோகியுடன் மாயாவதி கூட்டணி வைத்துள்ளார். இப்போது இதே நிலையை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு முன்னெடுத்துள்ளார் மாயாவதி.

    மாயாவதி இதுதொடர்பாக பேசுகையில், “திக்விஜய் சிங் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ்-பகுஜன் சமாஜ் கூட்டணியை விரும்பவில்லை. அவர்கள் அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளுக்கு பயப்படுகிறார்கள். மாயாவதிக்கு மத்திய அரசிடம் இருந்து நெருக்கடி என்று திக்விஜய் சிங் கூறுவதில் எந்த ஒரு அடிப்படையும் கிடையாது. காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கூட்டணி தொடர்பான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் நோக்கம் நேர்மையானது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கூட்டணிக்கு நெருக்கடியான நிலையே ஏற்படுத்துகிறார்கள். காங்கிரஸ் கட்சியும் மிகவும் ஆணவமாக உள்ளது. தனியாகவே பா.ஜ.கவை எதிர்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான நிலை அவர்களுடைய (காங்கிரஸ்) ஊழல் மற்றும் தவறுகளை இன்னும் மக்கள் மறக்கவில்லை. தவறை சரிசெய்யுவும் அவர்கள் விரும்பவில்லை,” என கூறியுள்ளார். 

    ‘பா.ஜ.கவை போன்று காங்கிரசும் எங்களுடைய கட்சியை அழித்துவிட வேண்டும் என்று சதி திட்டம் தீட்டுகிறது. எனவே, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் யாருடனும் கூட்டணி கிடையாது. நாங்கள் தனியாகவே போட்டியிடுவோம்’ என கூறியுள்ளார் மாயாவதி. 

    மாயாவதியின் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விவகாரத்தில் காங்கிரசுக்கு நேரிட்டுள்ள மற்றொரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
    பகுஜன் சமாஜ் உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை எதுவும் பேசப்படவில்லை எனவும், அதற்கான நேரம் வரும் போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். #AkhileshYadav
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் செல்வாக்கை முறியடிக்கும் விதமாக சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றினைந்துள்ளன. இந்த கூட்டணி சமீபத்தில் நடந்த கோரக்பூர், கைரானா ஆகிய மக்களவை தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவை வீழ்த்தியது.

    அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்த கூட்டணி கைகோர்த்துள்ள நிலையில், பாஜகவும் இந்த மெகா கூட்டணியை வீழ்த்த பல திட்டங்களை வகுத்து வருகின்றது. இதற்கிடையே, அம்மாநிலத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் 40 தொகுதிகளில் போட்டியிட பகுஜன் சமாஜ் விரும்புவதாக தகவல்கள் வெளியாகின.

    இது தொடர்பான கேள்விக்கு இன்று பதிலளித்த சமாஜ்வாடி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், “தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறது என நாளிதழ்கள்தான் செய்தி வெளியிடுகின்றன. ஆனால், அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்பதே உண்மை. அதற்கான நேரம் வரும் போது தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவோம்” என அவர் கூறினார்.

    மேலும், மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கும் அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். 
    ×