search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bahujan samaj"

    • பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் இன்று நடந்தது.
    • இதில் மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்துள்ளார்.

    லக்னோ:

    உத்தரப் பிரதேச முன்னாள் முதல் மந்திரியான மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாயாவதி தனது அரசியல் வாரிசை அறிவித்தார்.

    இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான உதய்வீர் சிங் கூறுகையில், மருமகன் ஆகாஷ் ஆனந்தை அவர் அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.

    • புதுவை பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில், மாநில மற்றும் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி.யும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அசோக் சித்தார்த், மத்திய ஒருங்கிணைப்பாளர், நித்தின் சிங் தலைமையேற்று கலந்துகொண்டனர்.
    • நிகழ்ச்சியில் 200 இளைஞர்களுடன் சீஷப்பிள்ளை கட்சியில் இணைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில், மாநில மற்றும் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி.யும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அசோக் சித்தார்த், மத்திய ஒருங்கிணைப்பாளர், நித்தின் சிங் தலைமையேற்று கலந்துகொண்டனர்.

    அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின் 150 வாகனங்களில் 300 பேர்கள் யானைக்கொடியேந்தி பங்கேற்றனர்.

    அதனை தொடர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளராக பாவானி இளவேனிலை தேசிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்தனர். இளைஞர்கள் அனைவரும் ஜெய் பீம் முழக்கமிட்டனர்.

    அதனை தொடர்ந்து ஏற்புரை வழங்கிய மாநில ஒருங்கிணைப்பாளர் பவானி இளவேனில் புதுவையில் பாபாசாகேப் அம்பேத்கர் கொள்கையை வெற்றியடைய செய்வதே லட்சியம் என பேசினார்.

    நிகழ்ச்சியில் 200 இளைஞர்களுடன் சீஷப்பிள்ளை கட்சியில் இணைந்தனர். கூட்டத்தில் புதுவை மாநில தலைவர் மூர்த்தி மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

    பறை இசை மற்றும் கொள்கை பாடலுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர்கள் கி.கோ.மதிவதணன் மற்றும் உதயகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர்.

    மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
    லக்னோ:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமித் ஷா பேரணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் ஒருநாள் முன்னதாகவே அங்கு பிரசாரத்தை நிறுத்துமாறு தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். 



    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் மம்தா பானர்ஜியை குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர்.
    நாட்டின் பிரதமராக இருப்பவர் அநீதி இழைப்பது அவரது பதவிக்கு பொருத்தமாக இருக்காது.

    மேற்கு வங்காளத்தில் இன்று இரவு 10 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. ஏனென்றால் மாலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார கூட்டங்கள் நடைபெற உள்ளது. தடைவிதிக்க வேண்டும் என முடிவெடுத்த தேர்தல் ஆணையம், அதை காலை 10 மணி முதலே அறிவித்திருக்கலாமே என கேள்வி எழுப்பியுள்ளார்.
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூழ்கிக் கொண்டு வருவதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    தேர்தலை முன்னிட்டு சாலைகளில் பேரணிகள், மத தலங்களில் வழிபாடுகள் உள்ளிட்டவற்றுக்கு அரசியல் கட்சிகள் பெரிய தொகைகளை செலவிட்டு வருகின்றன. எனவே தேர்தல் ஆணையம் இந்த செலவையும் வேட்பாளர் கணக்கில் சேர்க்க வேண்டும்.



    பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்ட வேட்பாளர்கள் மத வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்வது போன்ற காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும்.இதுகுறித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வுக்கு இது கடைசி தேர்தல். இத்தேர்தலில் பா.ஜ.க. அரசு நிச்சயம் தோற்கும்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூழ்கிக் கொண்டு வருவதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
    வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக்கிங் குளறுபடி சர்ச்சையை அடுத்து 2019 தேர்தலை வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் என மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். #Mayawati #ParliamentElection #BallotPapers
    லக்னோ:

    கடந்த 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ததன் மூலம் காங்கிரஸ் தோல்வியடைந்து, பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்து விட்டதாக பிரபல மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா என்பவர் குற்றம்சாட்டினார்.

    மேலும், உ.பி., குஜராத், டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த தில்லுமுல்லு தொடர்ந்தது. ராணுவ தேவைக்காக பயன்படுத்தப்படும் அலைவரிசையை பா.ஜ.க. பயன்படுத்தி, வாக்கு பதிவு இயந்திரங்களுக்குள் ஊடுருவி இந்த தில்லுமுல்லுவை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

    ஏற்கனவே, வாக்கு பதிவு இயந்திரங்கள் நம்பகத்தன்மை இல்லாதவை, தில்லுமுல்லு செய்ய ஏற்றவை, தேர்தல் முடிவுகளையே மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளவை என்று பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.



    இதற்கிடையே, சையது சுஜாவின் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் ஆணையம், இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜனநாயகத்தின் நலனை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக்கிங் விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்ய வேண்டும். பிரச்சனையை சரிசெய்ய வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் முடியாது என்றால் வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்தலாம். வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம். இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #Mayawati #ParliamentElection #BallotPapers
    சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சிகள் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்துள்ளதால் அதை உடைக்கும் வகையில் சி.பி.ஐ. விசாரணையை மத்திய அரசு ஏவி விட்டுள்ளது என்று அகிலேஷ் யாதவ் புகார் தெரிவித்துள்ளார். #akhileshyadav #Samajwadi Bahujansamaji

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் 2012-ல் இருந்து 2017 வரை அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்து வந்தார். அப்போது 2012-ல் இருந்து 2013 வரை சுரங்கத்துறை மந்திரி பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனித்து வந்தார். பின்னர் வேறு மந்திரி நியமிக்கப்பட்டார்.

    இந்த காலக்கட்டத்தில் விதிமுறைகளை மீறி சுரங்கங்களை அனுமதித்து முறைகேடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஏற்கனவே சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது.

    ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, சமாஜ்வாடி எம்.எல்.சி. ரமேஷ்குமார் மிஸ்ரா உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை தொடங்கி உள்ளது. கடந்த சனிக்கிழமை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.

    அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது ஆட்சியில் சுரங்கத் துறை மந்திரியாக இருந்தவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் சி.பி.ஐ. திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

    இது சம்பந்தமாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சிகள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்துள்ளதால் அதை உடைக்கும் வகையில் சி.பி.ஐ. விசாரணையை மத்திய பாரதீய ஜனதா அரசு ஏவி விட்டுள்ளது.

    பழைய வழக்கை மீண்டும் தோண்டி விசாரிக்கிறார்கள். இதன்மூலம் பாரதீய ஜனதா தனது உண்மையான முகத்தை காட்டுகிறது.

    சி.பி.ஐ.யை தனது கைப்பாவையாக வைத்து கொண்டு பாரதீய ஜனதா இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

    நாங்கள் கூட்டணி அமைத்து மக்களை சந்திக்க செல்கிறோம். எங்களை தடுத்து விடலாம் என்று பார்க்கிறார்கள். சி.பி.ஐ. என்ன செய்ய முடியுமோ? செய்யட்டும்.

    அவர்கள் எங்களிடம் கேள்வி கேட்டால் நாங்கள் பதில் சொல்ல தயார். நாங்கள் சொல்லும் பதில் மட்டும் அல்ல, இந்த நாட்டின் மக்களும் பாரதீய ஜனதாவுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறார்கள்.

    பாரதீய ஜனதா தனது உண்மை முகத்தை காட்டியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு காலத்தில் காங்கிரஸ் இதை செய்தது. இப்போது பாரதீய ஜனதா செய்கிறது.

    பாரதீய ஜனதாவின் இந்த செயலுக்கு எதிர் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #akhileshyadav #Samajwadi Bahujansamaji

    காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநில தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். #Mayawati
    லக்னோ:

    2019 பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டு பா.ஜ.கவை எதிர்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் பெரும் பொறுப்பு காங்கிரஸ் கட்சியின் கையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    2019 தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. 

    பா.ஜ.க. ஆட்சியில் உள்ள சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரசுடன் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியை தொடங்கிய அஜித் ஜோகியுடன் மாயாவதி கூட்டணி வைத்துள்ளார். இப்போது இதே நிலையை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு முன்னெடுத்துள்ளார் மாயாவதி.

    மாயாவதி இதுதொடர்பாக பேசுகையில், “திக்விஜய் சிங் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ்-பகுஜன் சமாஜ் கூட்டணியை விரும்பவில்லை. அவர்கள் அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளுக்கு பயப்படுகிறார்கள். மாயாவதிக்கு மத்திய அரசிடம் இருந்து நெருக்கடி என்று திக்விஜய் சிங் கூறுவதில் எந்த ஒரு அடிப்படையும் கிடையாது. காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கூட்டணி தொடர்பான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் நோக்கம் நேர்மையானது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கூட்டணிக்கு நெருக்கடியான நிலையே ஏற்படுத்துகிறார்கள். காங்கிரஸ் கட்சியும் மிகவும் ஆணவமாக உள்ளது. தனியாகவே பா.ஜ.கவை எதிர்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான நிலை அவர்களுடைய (காங்கிரஸ்) ஊழல் மற்றும் தவறுகளை இன்னும் மக்கள் மறக்கவில்லை. தவறை சரிசெய்யுவும் அவர்கள் விரும்பவில்லை,” என கூறியுள்ளார். 

    ‘பா.ஜ.கவை போன்று காங்கிரசும் எங்களுடைய கட்சியை அழித்துவிட வேண்டும் என்று சதி திட்டம் தீட்டுகிறது. எனவே, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் யாருடனும் கூட்டணி கிடையாது. நாங்கள் தனியாகவே போட்டியிடுவோம்’ என கூறியுள்ளார் மாயாவதி. 

    மாயாவதியின் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விவகாரத்தில் காங்கிரசுக்கு நேரிட்டுள்ள மற்றொரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
    சத்தீஷ்காரை தொடர்ந்து மத்திய பிரதேச தேர்தலிலும் மாயாவதி, அணி மாறுவதால் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. #Mayawati
    லக்னோ:

    அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்க வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இதற்காக இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி மற்றும் பல்வேறு மாநில கட்சிகளுடன் நெருக்கத்தை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப இந்த கட்சிகளும் காங்கிரசுடன் இணைந்து பா.ஜனதாவை எதிர்த்து வருகின்றன.

    ஆனால் விரைவில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக களமிறங்கும் முடிவை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி எடுத்துள்ளார். அதன்படி சத்தீஷ்கார் மாநில தேர்தலில், அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியையும், தொகுதி பங்கீட்டையும் அவர் இறுதி செய்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி, அங்கு 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து விட்டது. மேலும் அரியானாவிலும் இந்திய தேசிய லோக்தளத்துடன் கூட்டணிக்கு அந்த கட்சி தயாராகி விட்டது.

    இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணியை அமைக்க பகுஜன் சமாஜ் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதை கட்சியின் மூத்த தலைவர் ஒருவரும் உறுதி செய்தார். 3-வது அணி தொடர்பாக இடதுசாரிகள், சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ்-பா.ஜனதாவை எதிர்க்கும் பிற மதசார்பற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

    அதேநேரம் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறிய அவர், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணிக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் தங்கள் மரியாதைக்கு குறைவாக எதையும் ஏற்கமாட்டோம் எனவும் அவர் கூறினார்.

    மாயாவதியின் இந்த திடீர் நடவடிக்கையால் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது. அப்படி 3-வது அணி உருவானால் மாநில தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கே வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். #Mayawati #BahujanSamaj
    பகுஜன் சமாஜ் உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை எதுவும் பேசப்படவில்லை எனவும், அதற்கான நேரம் வரும் போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். #AkhileshYadav
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் செல்வாக்கை முறியடிக்கும் விதமாக சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றினைந்துள்ளன. இந்த கூட்டணி சமீபத்தில் நடந்த கோரக்பூர், கைரானா ஆகிய மக்களவை தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவை வீழ்த்தியது.

    அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்த கூட்டணி கைகோர்த்துள்ள நிலையில், பாஜகவும் இந்த மெகா கூட்டணியை வீழ்த்த பல திட்டங்களை வகுத்து வருகின்றது. இதற்கிடையே, அம்மாநிலத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் 40 தொகுதிகளில் போட்டியிட பகுஜன் சமாஜ் விரும்புவதாக தகவல்கள் வெளியாகின.

    இது தொடர்பான கேள்விக்கு இன்று பதிலளித்த சமாஜ்வாடி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், “தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறது என நாளிதழ்கள்தான் செய்தி வெளியிடுகின்றன. ஆனால், அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்பதே உண்மை. அதற்கான நேரம் வரும் போது தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவோம்” என அவர் கூறினார்.

    மேலும், மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கும் அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். 
    ×