search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேரம் வரும் போது பேசுவோம் - பகுஜன் சமாஜ் உடன் தொகுதி பங்கீடு குறித்து அகிலேஷ் விளக்கம்
    X

    நேரம் வரும் போது பேசுவோம் - பகுஜன் சமாஜ் உடன் தொகுதி பங்கீடு குறித்து அகிலேஷ் விளக்கம்

    பகுஜன் சமாஜ் உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை எதுவும் பேசப்படவில்லை எனவும், அதற்கான நேரம் வரும் போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். #AkhileshYadav
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் செல்வாக்கை முறியடிக்கும் விதமாக சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றினைந்துள்ளன. இந்த கூட்டணி சமீபத்தில் நடந்த கோரக்பூர், கைரானா ஆகிய மக்களவை தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவை வீழ்த்தியது.

    அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்த கூட்டணி கைகோர்த்துள்ள நிலையில், பாஜகவும் இந்த மெகா கூட்டணியை வீழ்த்த பல திட்டங்களை வகுத்து வருகின்றது. இதற்கிடையே, அம்மாநிலத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் 40 தொகுதிகளில் போட்டியிட பகுஜன் சமாஜ் விரும்புவதாக தகவல்கள் வெளியாகின.

    இது தொடர்பான கேள்விக்கு இன்று பதிலளித்த சமாஜ்வாடி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், “தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறது என நாளிதழ்கள்தான் செய்தி வெளியிடுகின்றன. ஆனால், அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்பதே உண்மை. அதற்கான நேரம் வரும் போது தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவோம்” என அவர் கூறினார்.

    மேலும், மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கும் அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×