என் மலர்
இந்தியா

கணவனுக்கு ஆண்மைக் குறைவு.. குழந்தைக்காக மைத்துனருடன் உடலுறவுக்கு நிர்பந்தம்.. மாயாவாதி சகோதரன் மகள் புகார்
- விஷாலின் சகோதரனுடன் உடல் உறவு கொள்ளும்படி தன்னை மாமியார் வீட்டார் வற்புறுத்தினர்
- மாமியார் புஷ்பா தேவி ஹாபூர் நகராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதிக்கு ஆறு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் என ஒன்பது உடன்பிறப்புகள் உள்ளனர். சகோதரர்களில் ஒருவரான நரேஷ் உடைய மகள் ஆலிஸ். ஆலிஸ் கடந்த 2023 இல் விஷால் என்பவரை மணந்து ஹராப்பூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஆலிஸ் அவரது மாமியாரும் ஹாபூர் நகராட்சி மன்றத் தலைவருவமான புஷ்பா தேவி, கணவன் விஷால், மாமனார் ஸ்ரீபால் சிங் உட்பட ஏழு பேர் மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துள்ளார்.
தனது மாமியார் இந்திராபுரத்தில் ரூ.50 லட்சமும், ஒரு பிளாட்டும் கேட்டு மிரட்டியதாக ஆலிஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது மட்டுமல்லாமல், திருமணத்திற்கு முன்பு, கணவர் விஷால் உடலை கட்டமைக்க ஸ்டீராய்டு ஊசிகளை எடுத்துக்கொண்டதாகவும், அதன் காரணமாக அவர் ஆண்மைக் குறைவு அடைந்ததாகவும் ஆலிஸ் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு கணவன் தன்னை விட்டுப் பிரிந்து வாழத் தொடங்கியதாகவும், குழந்தை பெறுவதற்காக, தன்னை விஷாலின் சகோதரனுடன் உடல் உறவு கொள்ளும்படி தன்னை மாமியார் வீட்டார் வற்புறுத்தினர் என்றும் ஆலிஸ் தெரிவித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியில் உறுப்பினர்களாக இருந்த ஆலிஸ் உடைய மாமியார் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அரசியல் களத்திலும் விவாதப் பொருளாக உள்ளது.






