மருமகனின் பதவியை பறித்த மாயாவதி: கட்சியில் இருந்தும் நீக்கம்

மாயாவதி தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த 2023ம் ஆண்டு அறிவித்தார்.கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கினார்.
மருமகனின் பதவியை பறித்த மாயாவதி: கட்சியில் இருந்தும் நீக்கம்
Published on

லக்னோ:

மாயாவதி தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவித்தார். அதோடு ஆகாஷ் ஆனந்திற்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது வழங்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் அவரை கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கினார். ஆனால் அடுத்த சில வாரங்களில் மீண்டும் ஆகாஷ் ஆனந்திற்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து மாயாவதி அதிரடியாக நீக்கி உள்ளார்.

அவருக்கு பதில் அவரது தந்தை ஆனந்த் குமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம்ஜி கவுதம் ஆகியோரை அந்தப் பொறுப்பில் நியமித்துள்ளார்.

தனது கடைசி மூச்சு இருக்கும்வரை அரசியல் வாரிசை அறிவிக்கப் போவது இல்லை. கட்சி விவகாரத்தை தானே பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com