search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் ஊழலில் ரகசிய ஆவணங்களை மறைக்கும் காவலாளி நாட்டிற்கு  தேவையா?- மாயாவதி தாக்கு
    X

    ரபேல் ஊழலில் ரகசிய ஆவணங்களை மறைக்கும் காவலாளி நாட்டிற்கு தேவையா?- மாயாவதி தாக்கு

    பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி ரபேல் ஊழலில் ரகசிய ஆவணங்களை மறைக்கும் காவலாளி என மோடியை சாடியுள்ளார்.#Mayawati #BSP #PMModi #BJP
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளன.

    இந்நிலையில் பிரதமர் மோடி, பாராளுமன்ற தேர்தலையொட்டி இணையதள பயன்பாட்டளர்களை கவரும் முனைப்புடன் கடந்த வாரம் 'காவலாளி (சவுகிதார்) நரேந்திர மோடி ' என தனது டுவிட்டர் பக்கத்தில் பெயர் மாற்றம் செய்தார்.

    இதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள், பாஜகவை சேர்ந்த முதல் மந்திரிகள், மாநில மந்திரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பாஜக பிரமுகர்களும் மோடியைப் பின்பற்றி தங்களது டுவிட்டர் கணக்குகளில் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘காவலாளி’ (சவுகிதார்) என்ற அடைமொழியை இணைத்துள்ளனர்.



    இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி, இதனை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    பிரதமர் மோடி மற்றும் அவரது மந்திரிகள் என அனைவரும் காவலாளி (சவுகிதார்) என தங்கள் பெயரினை மாற்றியுள்ளனர். இந்த காவலாளிகள் ரபேல் ஊழல் விவகாரத்தில் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதை மறந்துள்ளனர். இந்த ஆவணங்கள் தேர்தல் மற்றும் தங்கள் கட்சியின் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக மறைக்கப்பட்டுள்ளன.

    இது போன்ற காவலாளி நம் நாட்டிற்கு நிச்சயம் தேவையா? பாஜக தலைவர்கள் விரும்பும் எந்த பாணியில் வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் பெயரை மாற்றியது போல், சட்டம் ஒழுங்கினை காக்கும் காவலாளியாக இருக்க வேண்டும். மக்கள் இதையே விரும்பி ஏற்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Mayawati #BSP #PMModi #BJP
    Next Story
    ×