search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் நிவாரணத்துக்கு ஓராண்டு சம்பளத்தை நன்கொடையாக அளிக்கும் ஒடிசா முதல் மந்திரி
    X

    புயல் நிவாரணத்துக்கு ஓராண்டு சம்பளத்தை நன்கொடையாக அளிக்கும் ஒடிசா முதல் மந்திரி

    ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தனது ஓராண்டு அரசு சம்பளத்தை பானி புயல் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளார். #OdishaCM #NaveenPatnaik #NaveenPatnaik #FaniCyclone
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தை துவம்சம் செய்த பானி புயல் நிவாரணத்துக்கு தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் அளித்துள்ளது. இதேபோல், உத்தரபிரதேசம் மற்றும் நாட்டில் உள்ள பிற மாநிலங்களும் நிதியுதவி செய்து ஒடிசா மக்களின் சிதைந்துப்போன வாழ்வாதாரத்தை சீரமைக்க உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

    பானி புயல் தாக்கத்தால் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை இன்று ஆய்வு செய்த பிரதமர் மோடி நிவாரணப் பணிகளுக்கு கூடுதலாக 1000 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

    இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தனது ஓராண்டு அரசு சம்பளத்தை (சுமார் 20 லட்சம் ரூபாய்) புயல் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளார். #OdishaCM #NaveenPatnaik #NaveenPatnaik #FaniCyclone 
    Next Story
    ×