search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து நிறுவனத்துடன் தொடர்பு? ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி தாக்கு
    X

    இங்கிலாந்து நிறுவனத்துடன் தொடர்பு? ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி தாக்கு

    இங்கிலாந்து நிறுவனத்துடனான தொடர்பு குறித்த விவகாரத்தில், ராகுல் காந்தியை பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார். #PMPodi #RahulGandhi
    சாகர்:

    இங்கிலாந்தில் இயங்கி வந்த ‘பேக்கப்ஸ்’ என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ராகுல் காந்தியும் ஒருவர் எனவும், அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றிருப்பதாகவும் பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி உள்துறை அமைச்சகத்தில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்த விவகாரம் சமீபத்தில் சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில், பிரதமர் மோடியும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தியை அவர் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். மத்திய பிரதேசத்தின் சாகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசும்போது இது குறித்து மோடி கூறியதாவது:-



    எனது புகழை கெடுப்பதே தனது நோக்கம் என ராகுல் காந்தி ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவர் எந்த அளவுக்கு என்மீது சேற்றை வாரி எறிகிறாரோ, அந்த அளவுக்கு அதிக தாமரைகள் மலரும். என்னை அவர் தவறாக பேசப்பேச அவரது ஊழல்கள்தான் வெளிப்படுகின்றன.

    இங்கிலாந்தை சேர்ந்த பேக்கப்ஸ் என்ற நிறுவனத்துக்கு ராகுல் காந்தி சொந்தக்காரராக இருந்துள்ளார். அந்த நிறுவனம் கடந்த 2009-ம் ஆண்டு மூடப்பட்டது. ஆனால் அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஒருவருக்கு 2011-ம் ஆண்டில் நீர்மூழ்கி கப்பல் கட்டுவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அப்போது காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது. பேக்கப்ஸ் நிறுவன பங்குதாரர் எப்படி நீர்மூழ்கி கப்பலுக்கான ஒப்பந்தத்தை பெற்றார்? பாதுகாப்புத்துறை ஒப்பந்தத்தில் அவரது அனுபவம் என்ன?

    இவ்வாறு ராகுல் காந்தியின் ஊழல்கள் நீர், நிலம், ஆகாயம் என அனைத்து பகுதிகளில் இருந்தும் வெளியே வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.  #PMPodi #RahulGandhi 
    Next Story
    ×