search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியை குஜராத்துக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டார்கள் - சந்திரபாபு நாயுடு ஆவேசம்
    X

    மோடியை குஜராத்துக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டார்கள் - சந்திரபாபு நாயுடு ஆவேசம்

    ஆந்திராவில் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்ற மாபெரும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு மோடியை குஜராத்துக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதாக தெரிவித்தார். #peopleareready #sendModi #ChandrababuNaidu
    விசாகப்பட்டினம்:

    தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டனம் நகரில் தனது ஆதரவு கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.

    இன்றிரவு நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அங்கு திரண்டிருந்தவர்களிடையே பேசிய சந்திரபாபு நாயுடு, மக்களின் நன்மைக்காக பாடுபடுவதால் ஆந்திராவில் எனது தலைமையிலான அரசுக்கும், டெல்லியில் கெஜ்ரிவால் அரசுக்கும், மேற்கு வங்காளத்தில் மம்தா அரசுக்கும் பிரதமர் மோடி இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும், அவரை குஜராத்துக்கு அனுப்பி வைக்க மக்கள் தயாராகி விட்டதாகவும் குறிப்பிட்டார்.

    இதே கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு ஆதரவு தரும் சில அமைப்புகளை சந்தித்து இனியும் மோடியை ஆதரிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப் போவதாக தெரிவித்தார்.

    பின்னர் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திராவை அதிநவீன மாநிலமாக உருவாக்குவதற்காக பாடுபட்ட சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து இந்த தேர்தலிலும் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

    கடந்த 70 ஆண்டுகால இந்திய வரலாறில் மோடி தலைமையிலான இந்த ஆட்சி மிக மோசமான ஊழல் மலிந்த ஆட்சியாக இருந்தது. 5 ஆண்டுகளில் மோடியும், அமித் ஷாவும் நாட்டை அழித்து விட்டதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.  
    #peopleareready #sendModi #ChandrababuNaidu
    Next Story
    ×