search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எனக்கு ஏதாவது நடந்தால் மக்களுக்கு மோடி பதில் சொல்ல நேரிடும் - அன்னா ஹசாரே
    X

    எனக்கு ஏதாவது நடந்தால் மக்களுக்கு மோடி பதில் சொல்ல நேரிடும் - அன்னா ஹசாரே

    லோக்பால், லோக் அயுக்தா அமைப்புகளை நடைமுறைப்படுத்தக்கோரி ஐந்தாவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் எனக்கு ஏதாவது நடந்தால் மக்களுக்கு மோடி பதில் சொல்ல நேரிடும் என அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார். #AnnaHazare #Lokpal #HungerStrike
    மும்பை:

    அரசு பணியாளர்கள் மீதான ஊழலை ஒழிக்க மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலங்களில் லோக் அயுக்தா சட்டம் 2013-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த சட்டம் மத்தியிலும், பல மாநிலங்களிலும் அமல்படுத்தப்படவில்லை.
     
    இந்த நிலையில் மத்தியில் லோக்பால் மற்றும் மராட்டியத்தில் லோக் அயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே மஹாராஷ்டிரா மாநிலம், அமகத் நகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் கடந்த மாதம் 30-ம் தேதி காந்தி நினைவுநாளன்று தனது தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

    ‘ஜன் அந்தோலன் சத்தியாகிரஹா’ என்ற பெயரில்  இன்று ஐந்தாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் 81 வயதான அன்னா ஹசாரேவின் உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.



    இந்நிலையில், உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் இருந்து பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அன்னா ஹசாரே ‘எனக்கு ஏதாவது நடந்தால் மக்களுக்கு மோடி பதில் சொல்ல நேரிடும்’என எச்சரித்துள்ளார்.

    சூழ்நிலைகளுக்கேற்ப போராட்டங்களை கையாண்ட ஒரு காந்தியவாதியாகதான் மக்கள் என்னை கருதுகிறார்கள். எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் நபராக அவர்கள் என்னைப் பார்க்கவில்லை. எனவே, எனக்கு ஏதாவது ஏற்பட்டால் மக்களுக்கு பிரதமர் மோடி பதில் சொல்ல நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். #AnnaHazare #Lokpal #HungerStrike
    Next Story
    ×