search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.ஐ.க்கு நிரந்தர இயக்குனரை ஏன் நியமிக்கவில்லை? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
    X

    சி.பி.ஐ.க்கு நிரந்தர இயக்குனரை ஏன் நியமிக்கவில்லை? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

    சி.பி.ஐ. துறைக்கு நிரந்தரமாக இரு இயக்குனரை மத்திய அரசு இன்னும் நியமிக்காதது ஏன்? என சுப்ரீம் கோர்ட் இன்று கேள்வி எழுப்பியுள்ளது. #SCasksCentre #CBIdirector
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. துறைக்கு இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஒரு அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கு நீதிபதிகள் அருண் மிஷ்ரா, நவீன் சின்ஹா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலை பார்த்து சி.பி.ஐ. துறைக்கு நிரந்தரமாக இரு இயக்குனரை மத்திய அரசு இன்னும் நியமிக்காதது ஏன்? என நீதிபதிகள் கேட்டனர்.



    இந்த பதவி மிகவும் தனித்துவமும், முக்கியத்துவமும் வாய்ந்த பதவி என்பதால் இதில் இடைக்கால இயக்குனர் நீண்ட காலத்துக்கு அமர்ந்திருப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர். இந்நேரம் நிரந்தர இயக்குனரை மத்திய அரசு நியமித்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

    இதற்கு பதிலளித்த அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்காக பிரதமர் தலைமையில் உயரதிகாரம் கொண்ட குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். #SCasksCentre #CBIdirector 
    Next Story
    ×