search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல்
    X

    பாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல்

    பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. #ParlimentElection2019 #ECI #Pollschedule
    புதுடெல்லி:

    மத்தியில் உள்ள பாஜக அரசின் ஆட்சிக்காலம் இந்த ஆண்டின் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, வரும் மே மாதத்துக்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும். எனவே இதற்கான ஆயத்த வேலைகளில் தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
     
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்றும் நோக்கில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன.



    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷன் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில், பாராளுமன்ற தேர்தலுக்கு தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குச் சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதிகளை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    பாராளுமன்ற தேர்தல் தேதிகளை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளது எனவும்,  தேர்தலை 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. #ParlimentElection2019 #ECI #Pollschedule
    Next Story
    ×