என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்
Byமாலை மலர்6 Jan 2019 12:16 PM GMT (Updated: 6 Jan 2019 12:16 PM GMT)
ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்ததாக பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங். தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார். #RafaleDeal #NirmalaSitharaman #Congress #RahulGandhi
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
அப்போது அவர், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே. நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பாஜக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்ததாக பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாராளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார். ஆனால், இதுவரை எந்த ஒரு ஆர்டரும் பெறப்படவில்லை.
எனவே, பாராளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி ஆர்டர் தந்ததற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும். இல்லையேல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். #RafaleDeal #NirmalaSitharaman #Congress #RahulGandhi
Next Story
×