search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்த ஆடிட்டர் குருமூர்த்தி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
    X

    நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்த ஆடிட்டர் குருமூர்த்தி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

    நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்தது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆடிட்டர் குருமூர்த்திக்கு டெல்லி ஐகோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. #DelhiHighCourt #PaChidambaram #AuditorGurumurthy
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்த போது இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜியின் ‘ஐ.என்.எக்ஸ். மீடியா’ நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத்தர சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த முரளிதர், நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கினார். இதுகுறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், கார்த்தி சிதம்பரத்தின் தந்தையான மூத்த வக்கீல் ப.சிதம்பரத்திடம், முரளிதர் ஜூனியராக வேலை செய்தார். அந்த விசுவாசத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளார்’ என்று கூறியிருந்தார்.



    இதுகுறித்து டெல்லி ஐகோர்ட்டில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் ஆடிட்டர் குருமூர்த்தி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் தலைமையிலான அமர்வு எடுத்துள்ளது. இதற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன் அனுப்பி உள்ளது. #DelhiHighCourt #PaChidambaram #AuditorGurumurthy
    Next Story
    ×