search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - ராமன் சிங்கை எதிர்த்து வாஜ்பாய் உறவினரை நிறுத்தியது காங்கிரஸ்
    X

    சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - ராமன் சிங்கை எதிர்த்து வாஜ்பாய் உறவினரை நிறுத்தியது காங்கிரஸ்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி ராமன் சிங்கை எதிர்த்து வாஜ்பாய் உறவினரை நிறுத்தியுள்ளது காங்கிரஸ். #ChhattisgarhElections #Congress
    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ராமன் சிங் பதவி வகித்து வருகிறார். 

    இதற்கிடையே, சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும், மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 18 தொகுதிகளில் நவம்பர் 12-ம் தேதியும், 72 தொகுகளில் 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி ராமன் சிங்கை எதிர்த்து வாஜ்பாய் உறவினரை நிறுத்தியுள்ளது காங்கிரஸ்.



    இதுதொடர்பாக, காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். பாஜக சார்பில் முதல் மந்திரி ராமன் சிங் ராஜ்நந்தகாவ் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவினர் கருணா சுக்லா வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார்.

    சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. #ChhattisgarhElections #Congress
    Next Story
    ×