search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் தற்போதும் புகார் அளிக்கலாம்- மத்திய அரசு
    X

    சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் தற்போதும் புகார் அளிக்கலாம்- மத்திய அரசு

    சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் தற்போதும் புகார் அளிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. #POSCO #MeToo #MeTooComplaint #HarassmentComplaint
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்தும், இதனால் தாங்கள் அனுபவித்த மனவேதனை குறித்தும் பெண்கள் தைரியத்துடன் வெளிப்படுத்தி வருகின்றனர். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.



    இதுதொடர்பான செய்திகளை பார்க்கும், கேட்கும் பொதுமக்களிடம் இருந்து பரவலாக வரும் கேள்வி என்னவென்றால், இத்தனை ஆண்டுகள் மவுனமாக இருந்துவிட்டு, இப்போது ஏன் புகார் கூற வேண்டும்? என்பதுதான். சுய விளம்பரத்திற்காகவோ அல்லது சமூகத்தில் அந்தஸ்துடன் உள்ள நபர்களை அவமானப்படுத்தும் நோக்கத்திற்காகவோ இதுபோன்ற ஆதாரமற்ற புகாரை கூறுவதாக பலர் குறிப்பிடுகின்றனர்.

    இந்நிலையில், பாலியல் தொடர்பான புகார் கொடுப்பதற்கான காலவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் தற்போதும் புகார் அளிக்கலாம் என்றும், போக்சோ சட்டத்தில் புகார் அளிக்க எந்தவித காலவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் மத்திய பெண்கள் மற்றும்  குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #MeToo  #MeTooComplaint #POCSO #HarassmentComplaint 
    Next Story
    ×