search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தளத்தில் நடந்த கண்டன ஊர்வலத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்ற காட்சி.
    X
    பந்தளத்தில் நடந்த கண்டன ஊர்வலத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்ற காட்சி.

    இந்துக்களின் கலாசாரத்தை அழிக்கும் கம்யூனிஸ்டுகளின் கனவு பலிக்காது- தமிழிசை சவுந்தரராஜன்

    இந்துக்களின் கலாசாரத்தை அழிக்கும் கம்யூனிஸ்டுகளின் கனவு பலிக்காது என்று கேரளாவில் நடைபெற்ற ஊர்வலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். #BJP #TamilisaiSoundararajan #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    பாரதிய ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பந்தளம் அரண்மனை முன்பு இருந்து கலெக்டர் அலுவலகம் வரை கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இதில் தேசிய செயலாளர் ஷோ தலைமை தாங்கினார்.

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    சபரிமலை ஆச்சாரத்தை மீறி இந்து பெண்கள் யாரும் செல்ல முயற்சிக்க மாட்டார்கள். கேரளாவில் உள்ள கம்யூனிஸ்டு அரசு இந்து விரோத அரசாக மாறி இந்துக்களின் கலாச்சாரத்தை சீரழிக்க முயற்சி செய்கிறது. அது கனவில் கூட நடக்காது.

    சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை என்ன விலை கொடுத்தும் தடுப்போம். கேரளாவில் இந்த அரசு தான் கடைசி கம்யூனிஸ்டு அரசாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டத்தில் நடைபெற்ற ஒரு பள்ளிக்கூட விழாவில் கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பங்கேற்றார். விழா முடிந்து அவர் காரில் சென்ற போது அங்கு கையில் கருப்பு கொடிகளுடன் வந்த பாரதிய ஜனதா கட்சியினர் அவரது காரை முற்றுகையிட்டனர். அவரை கண்டித்து கோ‌ஷங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பாரதிய ஜனதாவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு மந்திரியை பாதுகாப்பாக போலீசார் அழைத்துச் சென்றனர். #BJP #TamilisaiSoundararajan #Sabarimala
    Next Story
    ×