search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை டெல்லியில் வீழ்த்தும் ஒரே சக்தி ஆம் ஆத்மி தான் - கெஜ்ரிவால்
    X

    பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை டெல்லியில் வீழ்த்தும் ஒரே சக்தி ஆம் ஆத்மி தான் - கெஜ்ரிவால்

    எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை டெல்லியில் வீழ்த்தும் ஒரே மாற்றுச் சக்தியாக ஆம் ஆத்மி தான் உள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #AAPKejriwal #2019LokSabhapolls
    புதுடெல்லி:

    டெல்லி ரோகினி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு விழும் வாக்குகளை பிரிப்பதற்காக பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.-சும் காங்கிரசை ஆதரிக்க தந்திரமாக முன்வந்துள்ளன.

    பா.ஜ.க. மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். அதேவேளையில் ராகுல் காந்தி மற்றும் ஊழல் கட்சியான காங்கிரசுக்கு வாக்களிக்கவும் மக்கள் விரும்பவில்லை. டெல்லியை பொருத்தவரையில் பா.ஜ.க.வுக்கு எதிரான மாற்றுச்சக்தியாக ஆம் ஆத்மி மட்டுமே உள்ளது.

    இப்போது டெல்லியில் உள்ள பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் நடை பயிற்சிக்காக செல்லும் மக்களிடம் மோடி அரசுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் விஷமத்தனமான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மோடி அரசைவிட காங்கிரஸ் ஆட்சிதான் மேலானது என்னும் பிரசாரத்தின் மூலம் மோடி அரசுக்கு எதிரான மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் கட்சிக்கான வாக்கு வங்கியாக மாற்றி, ஆம் ஆத்மி வேட்பாளர்களை தோற்கடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்து நீங்கள் அனுப்பி வைத்தீர்கள். அதேவேளையில், 2015- டெல்லி சட்டசபை தேர்தலில் 70 இடங்களில் 67 தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை வெற்றிபெற வைத்தீர்கள்.

    இன்று டெல்லி மக்களுக்காக உழைப்பது யார்? நீங்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த 7 பா.ஜ.க. எம்.பி.க்களா, அல்லது சட்டசபைக்கு அனுப்பிவைத்த உங்களுக்காக ஓய்வில்லாமல் உழைக்கும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களா? என்பதை நன்றாக சிந்தித்துப் பார்த்து வரும் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AAPKejriwal #2019LokSabhapolls
    Next Story
    ×