search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலுவை ரசீதுகளுக்கு ஒப்புதல் அளிக்க ரூ.10 லட்சம் - லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி கைது
    X

    நிலுவை ரசீதுகளுக்கு ஒப்புதல் அளிக்க ரூ.10 லட்சம் - லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி கைது

    டெல்லியில் நிலுவையில் உள்ள ரசீதுகளுக்கு ஒப்புதல் அளிக்க 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரியை சிபிஐ போலீசார் கைது செய்தனர். #Ayush #CBI
    புதுடெல்லி:

    மத்திய ‘ஆயுஷ்’ அமைச்சகத்தில் சார்பு செயலாளராக பணியாற்றி வருபவர் ஆர்.கே.காத்ரி. ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் இவர் இருந்து வருகிறார்.

    இதற்கிடையே, மருந்து பொருட்கள் விற்பனை ஏஜென்ட் ஒருவர் தனக்கு வரவேண்டிய பணம் நிலுவையில் உள்ளது எனக்கூறி  அதற்கான ரசீதுகளை சமர்ப்பித்துள்ளார்.
     
    அப்போது அவரிடம் காத்ரி, ரசீதுகளுக்கு ஒப்புதல் அளிக்க தனக்கு 10 லட்சம் ரூபாய் தரவேண்டும் என கேட்டுள்ளார்.இதனால் மனா உளைச்சல் அடைந்த அந்த ஏஜென்ட் இதுகுறித்து சிபிஐயிடம் புகார் அளித்தார்.

    அவர்கள் வகுத்த திட்டப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய பணத்தை ஆர்.கே.காத்ரியிடம் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்டபோது ஆர்.கே.காத்ரியை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி விசாரித்து வருகின்றனர். #Ayush #CBI
    Next Story
    ×