search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 200 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு - வீரப்ப மொய்லி
    X

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 200 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு - வீரப்ப மொய்லி

    2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக மத்திய முன்னாள் மந்திரி வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். #VeerappaMoily #Congress #BJP #2019Elections
    புதுடெல்லி:

    2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக வரும் தெலுங்கானா உட்பட 5 மாநில தேர்தல்கள் இதற்கான அரையிறுதியாக பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் எனவும் கருத்துக்கணிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில், சமீபத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான வீரப்ப மொய்லி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ‘பாராளுமன்றத்தில் பிராந்தியம் வாரியாக காங்கிரஸ் வெற்றிபெறும் தொகுதிகள் அதிகரிக்கும். காங்கிரஸ் 150 தொகுதிகளை தாண்டி வெற்றிப்பெறும். நேர்த்தியான வேட்பாளர்கள் தேர்வு மற்றும் கூட்டணியின் ஆதரவு கிடைத்தால் காங்கிரஸ் 200 தொகுதிகளை எட்டவும் வாய்ப்பு உள்ளது.’

    மேலும், ரபேல் போர் விமான விவகாரத்தில் காங்கிரஸ் மட்டுமே முக்கியமாக வலியுறுத்துகிறது. இதர கட்சிகள் முக்கியத்துவம் அளிக்காததற்கு என்ன காரணம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வீரப்ப மொய்லி, ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கைகள் இருப்பதாகவும், இவ்விவகாரத்தை நாங்கள் கையில் எடுத்துள்ளோம், மற்ற கட்சிகளும் இப்பிரச்சனையை எழுப்பின. ஆனால் தொடரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பதற்கு எதிரான காரணியாக இதனை கருதவில்லை எனக்கூறிய வீரப்ப மொய்லி, ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஊழல் என கூறியுள்ளார். #VeerappaMoily #Congress #BJP #2019Elections
    Next Story
    ×