search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டின் பொருளாதாரத்தை கண்ணிவெடி மீது நிறுத்திச் சென்றது காங்கிரஸ் - பிரதமர் மோடி தாக்கு
    X

    நாட்டின் பொருளாதாரத்தை கண்ணிவெடி மீது நிறுத்திச் சென்றது காங்கிரஸ் - பிரதமர் மோடி தாக்கு

    தபால் வங்கி சேவையை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, 2014-ம் ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தை கண்ணிவெடி மீது நிறுத்திவிட்டு காங்கிரஸ் சென்றதாக விமர்சித்துள்ளார். #PMModi #Congress
    புதுடெல்லி:

    தபால் வங்கி சேவையை நாடு முழுவதும் இன்று துவக்கி வைத்த பிரதமர் மோடி, இந்தியாவில் வாராக்கடன்கள் அனைத்தும் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

    கடந்த 2008-ம் ஆண்டு வரை 18 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே கடனாக அளிக்கப்பட்டு இருந்ததாகவும், அடுத்த 6 ஆண்டுகளில் 52 லட்சம் கோடியாக உயர்ந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், பணம் மீண்டும் வராது என்று தெரிந்தே வங்கி ஊழியர்கள் ஆட்சியில் இருந்த அந்த குடும்பத்தின் உத்தரவுக்கு கீழ்படிந்ததாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகுதான் நாட்டின் பொருளாதாரத்தை காங்கிரஸ் கண்ணிவெடி மீது நிறுத்தி விட்டு சென்றதை நாங்கள் உணர்ந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க.வின் இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து வங்கி கடன்களும் முறையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #Congress
    Next Story
    ×