search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுடனான வங்காளதேசம் உறவை என்.ஆர்.சி. அழித்து விடும் - மம்தா எச்சரிக்கை
    X

    இந்தியாவுடனான வங்காளதேசம் உறவை என்.ஆர்.சி. அழித்து விடும் - மம்தா எச்சரிக்கை

    இந்தியாவுடனான வங்காள தேசம் நாட்டின் உறவை என் ஆர் சி அழித்து விடும் என மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். #MamataBanarjee #NRCBill
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் வசிப்போர் குறித்த தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேட்டில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. இதனை காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது.

    இதற்கிடையே, தலைநகர் டெல்லி சென்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சி தலைவர்களை இன்று சந்தித்துப் பேசினார். மேலும், பாராளுமன்ற வளாகத்தில் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    என்ஆர்சி விவகாரம் வங்காளதேசம் உடனான இந்தியாவின் உறவை அழிக்கும். மேற்கு வங்காளம் மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த 833 பேர் அசாம் சிறைகளில் உள்ளார்கள். பாஜக வாக்கு வங்கி அரசியலை மேற்கொள்கிறது. என்ஆர்சி உலகையே பாதிப்புக்கு உள்ளாக்கும். 

    எல்லையை பாதுகாப்பது என்பது மத்திய அரசின் பொறுப்பு. இந்தியாவிற்குள் எத்தனை பேர் ஊடுருவுகிறார்கள் என்பதை மத்திய படைகள் பார்க்க வேண்டும். ஆனால் இப்போது ஊடுருவல்காரர்கள் என்று மக்களை துன்புறுத்துகிறார்கள்.
     
    அசாமிற்கு எதிர்க்கட்சிகள் குழுவை அனுப்ப வேண்டும். முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை அசாம் செல்ல கேட்டுக் கொண்டுள்ளேன் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுக்கும் வகையில் கூறியுள்ளார். #MamataBanarjee #NRCBill
    Next Story
    ×