search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் பட்ஜெட் புறக்கணிப்பு: சித்தராமையா கடும் அதிருப்தி
    X

    காங்கிரஸ் பட்ஜெட் புறக்கணிப்பு: சித்தராமையா கடும் அதிருப்தி

    காங்கிரஸ் பட்ஜெட் புறக்கணிக்கப்பட்டதால் சித்தராமையா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Siddaramaiah #Budjet
    பெங்களூரு:

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா உஜிரியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சேர்ந்து இயற்கை சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் அவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முனிரத்னா, எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினார்.

    அப்போது, சித்தராமையா பேசிய பேச்சு அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மந்திரி பதவி கிடைக்காதவர்கள் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தது சரியல்ல என்றும் சித்தராமையா கூறினார். புதிய மந்திரிகள் பட்டியலை ராகுல் காந்தி முடிவு செய்ததாகவும், அவரது முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

    மேலும் புதிய பட்ஜெட் வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால் குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதையும் கூறி சித்தராமையா தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. முன்பு தாக்கல் செய்யப்பட்ட காங்கிரஸ் பட்ஜெட்டை புறக்கணித்துவிட்டு புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்வதால், காங்கிரசின் நிலை என்னாவது என்றும் சித்தராமையா கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

    மேலும் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து குமாரசாமி புதிய பட்ஜெட்டுக்கு அனுமதி பெற்றதாகவும், தான் கூறிய கருத்து குறித்து ராகுல் காந்தியிடம் புகார் செய்ததாகவும், இது தன்னை வேதனை அடைய செய்துள்ளதாகவும் சித்தராமையா தனது ஆதரவாளர்களிடம் வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  #Siddaramaiah #Budjet #Tamilnews 
    Next Story
    ×