search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாண்டியா தொகுதியில் அம்பரிஷ் போட்டியிட மறுப்பு - காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி
    X

    மாண்டியா தொகுதியில் அம்பரிஷ் போட்டியிட மறுப்பு - காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் மாண்டியா தொகுதியில் நடிகர் அம்பரிஷ் போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #Ambareesh #Mandya #congress
    பெங்களூர்:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் கடந்த 15-ந்தேதி வெளியிடப்பட்டது.

    அந்த பட்டியலில் மாண்டியா தொகுதியில் பிரபல நடிகர் அம்பரிஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அம்பரிஷ் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்பட யாரையும் சந்திக்காமல் ஒதுங்கியே இருந்தார். முதல்-மந்திரி சித்தராமையா அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்ட போதும் அவர் பேச மறுத்து விட்டார்.

    கடந்த ஒரு வாரமாக மவுனமாக இருந்த அவர் தற்போது மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட போவதில்லை என்று அறிவித்துள்ளார். தனது முடிவை அவர் நண்பரான அமராவதி சந்திரசேகர் மூலம் சித்தராமையாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.



    நடிகர் அம்பரிஷ் கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். குறிப்பாக 2016-ம் ஆண்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவர் முதல்வர் சித்தராமையா மீதும் கோபத்தில் இருந்தார்.

    இந்த நிலையில் மீண்டும் டிக்கெட் கொடுத்ததை அவர் ஏற்க மறுத்து விட்டார். தகுதி இல்லை என்று சொல்லி தானே என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கினீர்கள். பிறகு ஏன் போட்டியிட வாய்ப்பு கொடுக்கிறீர்கள் என்று நடிகர் அம்பரிஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    நடிகர் அம்பரிசுக்கு மாண்டியா, மைசூரு, ஹசன், தும்கூர் மாவட்டங்களில் கணிசமான அளவுக்கு செல்வாக்கு உள்ளது. காங்கிரஸ் மேலிடம் கொடுத்த வாய்ப்பை அவர் நிராகரித்து விட்டதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக காங்கிரசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட அம்பரிசின் நண்பர் சந்திரசேகர் முயற்சி செய்து வருகிறார். அவருக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பாத சித்தராமையா, மாண்டியா மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆத்மானந்தாவை களம் இறக்க திட்டமிட்டுள்ளார். #Ambareesh #Mandya #congress

    Next Story
    ×