search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற நேரம் வீணடிப்பு - பா.ஜ.க. எம்.பி.க்கள் 12-ம் தேதி உண்ணாவிரதம்
    X

    பாராளுமன்ற நேரம் வீணடிப்பு - பா.ஜ.க. எம்.பி.க்கள் 12-ம் தேதி உண்ணாவிரதம்

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நேரம் வீணடிக்கப்பட்டதை கண்டித்து பா.ஜ.க. எம்.பி.க்கள் வரும் 12-ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
    புதுடெல்லி:

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, எஸ்.சி.,எஸ்.டி. சட்ட தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம், வங்கிக் கடன் மோசடி, உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் அமளி நீடித்தது. இன்று கூட்டத் தொடர் முடிவடைந்து பாராளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்ட 38-வது ஆண்டு தினத்தை பா.ஜ.க.வினர் இன்று கொண்டாடி வருகின்றனர்.

    இதைதொடர்ந்து, பாராளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார், கடந்த 23 நாட்களாக பாராளுமன்றத்தை முடக்கிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் போக்கை கண்டித்து வரும் 12-ம் தேதி பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    பாராளுமன்ற முடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் வரும் 12-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
    Next Story
    ×