search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி பா.ஜ.க. இணையத்தில் கசிவு - விசாரணைக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு
    X

    கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி பா.ஜ.க. இணையத்தில் கசிவு - விசாரணைக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்னர் பா.ஜ.க. பிரமுகரின் டுவிட்டர் பக்கத்தில் கசிந்தது தொடர்பாக விசாரிக்கும் குழுவை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

    ஆனால், தேர்தல் கமி‌ஷன் அறிவிக்கும் முன்பே கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி கசிந்தது. பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது டுவிட்டர் பக்கத்தில் கர்நாடகா தேர்தல் தேதியை பதிவிட்டிருந்தார்.

    மே 12-ம் தேதி வாக்குப்பதிவு, 18-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், டெல்லியில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், மே 12-ம் தேதி வாக்குப்பதிவு, 15-ம் தேதி முடிவுகள் வெளியாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக தாங்கள் அறிவிக்கும் முன்பே இவ்விவரம் கசிந்ததால் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அடைந்தது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று பிற்பகல் கூறுகையில், தகவல் கசிந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.



    பின்னர், இதுகுறித்து விளக்கம் அளித்த பா.ஜ.க., நிர்வாகிகள், பிரபல ஊடகம் வெளியிட்டிருந்த யூக செய்தியின் அடிப்படையில் அமித் மால்வியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக கூறினர்.

    இந்நிலையில், தேர்தலுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்னர் பா.ஜ.க. பிரமுகரின் டுவிட்டர் பக்கத்தில் கசிந்தது தொடர்பாக விசாரிக்கும் குழுவை தேர்தல் கமிஷன் இன்று மாலை நியமித்துள்ளது. இந்த குழுவில் தேர்தல் கமிஷன் முத்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

    இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்னும் பரிந்துரையுடன் இந்த விசாரணை தொடர்பான விபரங்களை இன்னும் ஏழு நாட்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறும் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×