search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி புது வியூகம்
    X

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி புது வியூகம்

    அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சி கொடியேற்றி தொடங்கி வைத்தார். சோனியாகாந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

    நேற்றைய மாநாட்டில் பிரியங்கா காந்தி பங்கேற்றார். மாநாடு தொடங்கும் முன்பே அதிகாலை 3 மணிக்கு இந்திராகாந்தி மைதானத்துக்கு வந்த அவர், சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோரது போஸ்டர்களை பார்வையிட்டார். அப்போது உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் அவருடன் பேசிக் கொண்டு இருந்தனர். 

    மாநாட்டுக்கான மேடை, போஸ்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து அவர் அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் பிரியங்காவை தேர்தல் களத்தில் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்ட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதேபோல பா.ஜ.க.வை வீழ்த்த பிரியங்காவும் வியூகமாக பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×