search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்க்கட்சிகளுக்கு விருந்து - பா.ஜ.க.வை அகற்ற சோனியா காந்தி வியூகம்
    X

    எதிர்க்கட்சிகளுக்கு விருந்து - பா.ஜ.க.வை அகற்ற சோனியா காந்தி வியூகம்

    பா.ஜ.க. ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இன்று இரவு விருந்தளிக்க உள்ளார்.
    புதுடெல்லி:

    பா.ஜ.க. ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இன்று இரவு விருந்தளிக்க உள்ளார்.

    மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. தலைமையிலான அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டுடன் பா.ஜ.க. ஆட்சி முடிவடைய உள்ளது.

    இதையடுத்து, 2019-ல் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும், பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற்காகவும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் சார்பில் டெல்லியில் எண் 10, ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி வீட்டில் இன்று நடைபெற உள்ள இரவு விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த விருந்தில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல் மந்திரிகள் பாபுலால் மராண்டி, ஹேமந்த் சோரன். பீகார் முன்னாள் முதல் மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி, லாலு மகன் தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரசின் சுதீப் பந்தோபாத்யா, தி.மு.க.வின் கனிமொழி, சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், மா. கம்யூனிஸ்டின் சீதாராம் யெச்சூரி, சிபிஐ எம்.மின் ராஜாஉள்பட பலர் கலந்து கொள்வார்கள் என காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×