search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழுவை மொத்தமாக மாற்ற ராகுல் காந்தி முடிவு
    X

    காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழுவை மொத்தமாக மாற்ற ராகுல் காந்தி முடிவு

    காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு மொத்தமாக கலைக்கப்பட்டுள்ளதையடுத்து அதற்கான புதிய உறுப்பினர்களை ராகுல் காந்தி விரைவில் தேர்வு செய்ய இருக்கிறார். #Congress #TopLeadershipBody
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி கடந்த டிசம்பர் 16-ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் மிக முதல்முறையாக ஒரு முக்கியமான அறிவிப்பை அவர் நேற்று வெளியிட்டு இருக்கிறார். அதன்படி தற்போது செயல்பட்டு வரும் உயர்மட்ட குழுவை மொத்தமாக களைத்து இருக்கிறார்.

    அந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், குலாம் நபி அசாத் ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள குழுவில் காங்கிரஸ் கட்சியின் இளம் உறுப்பினர்களும் இடம்பெற இருக்கிறார்கள்.

    அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி இந்த குழுவில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதாலும், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாலும் ராகுல் காந்தி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அதுவரை உயர்மட்டக்குழுவின் பொறுப்புகளை, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வழிகாட்டும் குழு பார்த்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 34 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த வழிகாட்டும் குழு இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளது. #Congress #TopLeadershipBody #RahulGandhi #tamilnews
    Next Story
    ×