search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திரா சிறப்பு அந்தஸ்துக்காக ராஜினாமா செய்ய தயாராகும் ஒய்.எஸ்.ஆர். காங். எம்.பி.க்கள்
    X

    ஆந்திரா சிறப்பு அந்தஸ்துக்காக ராஜினாமா செய்ய தயாராகும் ஒய்.எஸ்.ஆர். காங். எம்.பி.க்கள்

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்து உள்ளார்.
    நகரி:

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ‘பிரஜா சங்கல்ப யாத்திரை’ என்ற பெயரில் ஆந்திராவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    நடைபயணத்தின் 86-வது நாளான நேற்று நெல்லூர் மாவட்டம் கலிகிரியில் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:-

    தலைநகரம் இல்லாத ஆந்திர மாநிலத்திற்கு 5 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மாநிலங்களவையில் அறிவித்து இருந்தார். பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து அளிப்போம் என்று தெரிவித்தது. 15 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்தை போராடி பெறுவேன் என்று சந்திரபாபுநாயுடு அறிவித்தார்.

    மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டிலும் அதுகுறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மேலும் ஆந்திர மாநிலத்திற்கு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ளேயும், வெளியேயும் போராடி வருகிறார்கள்.

    ஏப்ரல் 5-ந் தேதி வரை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், அதுவரை எங்கள் கட்சி எம்.பி.க்கள் போராடுவார்கள். அதன்பின்னரும் சிறப்பு அந்தஸ்து அளிக்காவிட்டால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு ஊர் திரும்புவார்கள்.

    இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் 9 எம்.பி.க்கள் தேர்வு ஆனார்கள் இதில் சிலர் தெலுங்கு தேசத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். மாநிலங்களவையில் இந்த கட்சியில் ஒரு எம்.பி.யும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #tamilnews

    Next Story
    ×