search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி 3 நாள் பயணமாக பிப். 10-ல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கிறார்
    X

    பிரதமர் மோடி 3 நாள் பயணமாக பிப். 10-ல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கிறார்

    பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10-ம் தேதி மூன்று நாள் பயணமாக பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். #PMModi #MiddleEastVisit
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10-ம் தேதி மூன்று நாள் பயணமாக பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்.

    பிப்ரவரி 10-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு பாலஸ்தீனம் செல்கிறார். இதுவே அந்நாட்டு ஒரு இந்திய பிரதமரின் முதல் பயணமாகும். அங்கு பாலஸ்தீனம் பிரதமர் ரமி ஹம்தல்லாவை சந்தித்து பேசுகிறார். அன்று மாலையே அங்கிருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்கிறார்.

    துபாயில் 11-ம் தேதி நடைபெற இருக்கும் ஆறாவது உலக அரசு உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதன்பின்னர் அங்கு வசிக்கும் இந்திய மக்களை சந்தித்து பேசுகிறார்.

    12-ம் தேதி துபாயிலிருந்து ஓமன் செல்லும் மோடி, அந்நாட்டின் பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இது ஓமன் நாட்டுக்கு அவரது முதல் பயணமாகும். அன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் டெல்லிக்கு வருகிறார். #PMModi #MiddleEastVisit #tamilnews 
    Next Story
    ×