search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘சிஸ்டர்’ என கூறியது ‘பிஸ்டல்’ என காதில் விழுந்ததால் கைதான சசிதரூர் எம்.பி
    X

    ‘சிஸ்டர்’ என கூறியது ‘பிஸ்டல்’ என காதில் விழுந்ததால் கைதான சசிதரூர் எம்.பி

    ‘சிஸ்டர்’ என கூறியது அங்கிருந்த பயணியின் காதில் ‘பிஸ்டல்’ (துப்பாக்கி) என விழ அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கைது செய்யப்பட்டார்.
    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருவனந்தபுரம் எம்.பி.யாக உள்ள சசிதரூர் நேற்று ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்தார். டெல்லியில் இருந்து வரும் தனது சகோதரிக்காக அவர் அங்குள்ள ஒய்வறையில் இருந்துள்ளார். அப்போது, எதற்காக காத்திருக்கிறீர்கள்? என ஒருவர் கேட்டதற்கு, “ஃபார் மை சிஸ்டர்” (எனது தங்கைக்காக) என சசிதரூர் பதிலளித்துள்ளார்.

    அப்போது, சசிதரூர் ‘சிஸ்டர்’ என கூறியது அங்கிருந்த பயணி ஒருவரின் காதில் ‘பிஸ்டல்’ (துப்பாக்கி) என விழுந்துள்ளது. அவர் மெதுவாக அங்கிருந்து சென்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாரளித்தார். இதனையடுத்து, சசிதரூரை கைது செய்து தனியாக அழைத்துச் சென்ற அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    சிலமணி நேர விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள், பயணியின் தவறான புரிதல் காரணமாக இந்த சம்பவம் நடந்துவிட்டதாக விளக்கமளித்துள்ளனர்.
    Next Story
    ×