search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pistol"

    • சோனுவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்
    • துப்பாக்கியின் பின்புறத்தாலும் சுமைலாவின் முகத்தில் ஸோனு பலமாக தாக்கினார்

    புது டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ளது சாஸ்திரி பூங்கா பகுதி.

    இங்குள்ள புலாந்த் மஸ்ஜித் அருகில் சகோதரிகளான சோனு (30) மற்றும் அவர் தங்கை சுமைலா வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    தன் கணவருக்கும் தன் தங்கை சுமைலாவிற்கும் தவறான உறவிருப்பதாக சோனு சந்தேகம் அடைந்திருக்கிறார். இந்த பிரச்சனை தொடர்பாக சகோதரிகள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் இது தொடர்பான வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது ஆத்திரமடைந்த சோனு துப்பாக்கியால் தனது தங்கை சுமைலாவை முகத்திலேயே சுட்டார்.

    துப்பாக்கியின் ரவை சுமைலாவின் முகத்தில் தாக்கியும் ஆத்திரம் அடங்காத சோனு, அத்துப்பாக்கியின் பின்புறத்தால் சுமைலாவின் முகத்தில் பலமாக தாக்கினார்.

    இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, காயமடைந்த சுமைலாவை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

    இதனையடுத்து விரைந்து வந்த சாஸ்திரி பூங்கா காவல்துறையினர் சோனுவை கைது செய்தனர். சோனு மீது கொலை முயற்சி மற்றும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சோனுவிற்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    • புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிப்பது, தங்களின் வாகனங்களை கழுவுதல் வழக்கம்.
    • ஆய்வுக்கு அனுப்ப கடலூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணையாறு உள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காகவும், அப்பகுதியில் வசிப்பவர்கள் கடலூருக்கு வந்து செல்வதற்காகவும் புதுவை மாநில அரசால் தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால், கடலூர் மற்றும் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிப்பது, தங்களின் வாகனங்களை கழுவுதல் வழக்கம். பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்கள் அதிகளவில் வலை விரித்தும், தூண்டில் போட்டும் மீன்களை பிடிப்பார்கள். அதன்படி கடலூர் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் இன்று தரைப்பாலம் அருகே மீன்களை பிடிக்க வலை விரித்தனர். சிறிது நேரம் கழித்து வலையை மேலே எடுத்தனர். வலையில் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. இதனை பார்த்த சிறுவர்கள், பொம்மை துப்பாக்கி என நினைத்து கையில் எடுத்து சென்றனர்.

    அப்போது தரைப்பாலத்தில் சென்ற ஒருவர், சிறுவர்களிடமிருந்து இதனை வாங்கி பார்த்தார். இதையெல்லாம் நீங்கள் வைத்திருக்க கூடாது, பெரியவர்களிடம் தான் இருக்க வேண்டுமென கூறி வாங்கி சென்றுள்ளார். இதனால் குழப்பமடைந்த சிறுவர்கள் கலெக்டர் அலுவலகம் எதிரில் பணியில் இருந்த போலீசாரிடம் இது குறித்து கூறினார்கள். உடனடியாக தரைப்பாலத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரை வழிமறித்து, அவரிடமிருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதனைக் கண்ட போலீசார், இது ஒரு வகையான ஏர் பிஸ்டல் என்பதை உறுதி செய்தனர். இந்த கைத்துப்பாக்கியை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த துப்பாக்கியில் குண்டுகள் உள்ளதா? இது வேறு ஏதேனும் குண்டுகளுடன் ஒத்துப்போகிறதா? இந்த கைத்துப்பாக்கி எந்த காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டது? என்பது குறித்து கண்டறிய ஆய்வுக்கு அனுப்ப கடலூர் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்பிறகே இந்த கைத்துப்பாக்கி யாருடையது? எவ்வாறு தென்பெண்ணையாற்றுக்கு வந்தது என்பது குறித்து தெரியவரும் என கடலூர் புதுநகர் போலீசார் தெரிவித்தனர். சிறுவர்களின் மீன்பிடி வலையில் கைத்துப்பாக்கி சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்களில் ஈடுபட்டார்.
    • தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பால்துரையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர்.

    வாலிபர் கைது

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றிதிரிந்த ஒரு வாலிபரை சோதனை செய்த போது அவர் கைத்துப்பாக்கியை காட்டி போலீசாரை மிரட்டினார்.

    மேலும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்களில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மேலப்பாளையம் குறிச்சி நாகம்மாள்புரத்தை சேர்ந்த பால்துரை (வயது 24) என்பது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளது.

    குண்டர் சட்டம்

    தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பால்துரையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

    அதை ஏற்று மாநகர போலீஸ் கமிஷனர் அபினாஷ்குமார் உத்தரவின்படி பால்துரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நின்றிருந்த நபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர். #DelhiMetroStation #PistonBullet
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் முக்கியமானது காசியாபாத் ரெயில் நிலையம் ஆகும். அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நின்றிருந்தார். அப்போது அங்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர். அதன்பின்னர் அவரை பாதுகாப்பு படையினர், டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  #DelhiMetroStation #PistonBullet

    ×