புத்தகப் பையில் துப்பாக்கி கொண்டு வந்த சிறுவன்: பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி

மாணவன் பையில் புத்தகங்களுக்கு பதிலாக துப்பாக்கி இருப்பதைக் கண்டு மிரண்டனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
புத்தகப் பையில் துப்பாக்கி கொண்டு வந்த சிறுவன்: பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நஜப்கர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரத் தொடங்கினர்.

அப்போது ஒரு மாணவன் தயக்கத்துடன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தான். இதைக் கண்ட பள்ளி நிர்வாகத்தினர், அந்த மாணவனை அழைத்தனர். அவன் வைத்திருந்த புத்தகப் பையை சோதனையிட்டனர். அந்தப் பையில் புத்தகங்களுக்கு பதிலாக துப்பாக்கி இருப்பதைக் கண்டு மிரண்டனர்.

உடனே இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் துப்பாக்கியை வாங்கி பரிசோதித்தனர். விளையாட்டுப் பொருள் என நினைத்து அதை கொண்டு வந்ததாக மாணவன் கூறினான்.

துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீசார் உடனே அதற்கான உரிமத்தை ரத்துசெய்யும் நடவடிக்கையில் இறங்கினர்.

விசாரணையில், அந்த துப்பாக்கி மாணவனின் தந்தைக்குச் சொந்தமானது என்பதும், அவரது பெயரில் உரிமம் வாங்கப்பட்டுள்ளதும், சில மாதங்களுக்கு முன் மாணவனின் தந்தை காலமானதும் தெரிய வந்தது.

புத்தகப் பையில் துப்பாக்கி கொண்டு வந்த மாணவனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com