search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goontas Act"

    • போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்களில் ஈடுபட்டார்.
    • தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பால்துரையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர்.

    வாலிபர் கைது

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றிதிரிந்த ஒரு வாலிபரை சோதனை செய்த போது அவர் கைத்துப்பாக்கியை காட்டி போலீசாரை மிரட்டினார்.

    மேலும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்களில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மேலப்பாளையம் குறிச்சி நாகம்மாள்புரத்தை சேர்ந்த பால்துரை (வயது 24) என்பது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளது.

    குண்டர் சட்டம்

    தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் பால்துரையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

    அதை ஏற்று மாநகர போலீஸ் கமிஷனர் அபினாஷ்குமார் உத்தரவின்படி பால்துரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×