என் மலர்

  நீங்கள் தேடியது "school bag"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்கூல்பேக், லஞ்ச்பேக் வாங்க வற்புறுத்தக்கூடாது என தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  சென்னை:

  கோவை மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக ஹேமலதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பாடப் புத்தகங்களுக்கு ரூ. 5,000, சீருடை, லஞ்ச் பேக் போன்ற பொருட்களுக்கு ரூ.500 கேட்பதாக புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.  

  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக்கூடாது என்றும், பாட புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் தவிர பிற பொருட்களை வாங்கும்படி நிர்ப்பந்திக்க கூடாது என அறிவுறுத்தியது. இந்த வழக்கை ஜூன் 10-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை, காலணிகள் நவம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.
  சென்னை:

  தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி தொடர்பாக அனைத்து பொருட்களும் விலை இன்றி அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.  ஜூன் மாதம் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டவுடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து புத்தகப்பை, காலணி, கலர் பென்சில் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது.

  6, 9, 10-வது படிக்கும் 16 லட்சத்து 16 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு ஜியாமெண்ட்ரி பாக்ஸ், 3-வது முதல் 5-வது வரை படிக்கும் 15 லட்சத்து 15 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு கலர் பென்சில், 1-வது முதல் பிளஸ்-2 வரை படிக்கும் 72 லட்சத்து 55 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை, 1-வது முதல் 10-வது வரை படிக்கும் 58 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு காலணிகள் உள்ளிட்டவை கொடுக்கப்பட உள்ளன.

  இவை அனைத்தும் நவம்பர் மாதத்துக்குள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் என சென்னை டி.பி.ஐ. வளாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  ×