search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவு பனிப்பொழிவு- விவசாயிகள் கவலை
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவு பனிப்பொழிவு- விவசாயிகள் கவலை

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் மழை பெய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் மழை பெய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை மட்டுமே கைகொடுத்து வந்துள்ளது. இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த விவசாயிகள், மழை பொய்த்ததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    பருவமழை காலங்களில் பனி பொழிந்தால், மழை குறைந்துவிடும். சில நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. பருவம் தவறி மழை பெய்தாலும் நிலத்தடி நீராவது பெறுகும்.

    பருவம் தப்பினால் புயல் சின்னம் உருவானால் மட்டுமே மழை பெய்யும். பனி குறைந்து மழை பெய்ய வேண்டும். அக்டோபர், நவம்பர் மாதம் சராசரி மழை பெய்யாததால், மானாவாரி பயிர் சாகுபடியும், மகசூலும் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.

    தொடர்ந்து பல ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் விவசாயம் இல்லாமல், கடன் வாங்கியதை திருப்பி கொடுக்க முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மானாவாரி பயிருக்கு 10 நாட்களுக்கு இடைவெளியில் மழை பெய்தால் மட்டுமே, மகசூல் கிடைக்கும். கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு தவிர்க்கப்படும். குறிப்பாக ராமேசுவரம் தீவு பகுதிகளில் நல்ல மழை பெய்தும் மாவட்ட முழுவதும் பரவலாக சராசரி மழை கிடைக்கவில்லை.

    சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு உள்ளதால், இனியும் மழை பெய்யுமா என்ற கேள்விக்குறியுடன் விவசாயிகள் வருணபகவானின் கருணைக்கு காத்து இருக்கின்றனர்.

    Next Story
    ×