search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் பாலை வார்த்துள்ளது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
    X

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் பாலை வார்த்துள்ளது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் பாலை வார்த்துள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். #ADMK #RajendraBalaji #FirecrackersSale #SupremeCourt
    சிவகாசி:

    விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பட்டாசு மீதான தடை நீக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு பெரும் முயற்சி எடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீர்ப்பு 8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வில் பாலை வார்த்துள்ளது.

    அமைச்சர் ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. தற்போது மேடைகளில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி போன்று பேசி நடிக்கிறார்கள். எனவே அமைச்சர் ஜெயக்குமார் போல் வேண்டுமென்றே யாராவது பேசியிருக்கலாம்.


    குற்றாலத்தில் தற்போது தண்ணீர் அதிகமாக கொட்டுவதால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் குளிக்கச் சென்றிருப்பார்கள்.

    பால் கொள்முதல் உயர்வு குறித்து கூட்டுறவு சங்கத்தேர்தல் முடிந்தவுடன் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #RajendraBalaji  #FirecrackersSale #SupremeCourt
    Next Story
    ×