search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார்
    X

    முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார்

    முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். #ParithiIlamvazhuthi
    சென்னை :

    முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார். மாரடைப்பு காரணமாக அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 58.

    தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம்வழுதி 1996 - 2001 காலகட்டத்தில் சட்டமன்ற துணை தலைவராக பதவி வகித்தார். மேலும், 2006 - 2011 திமுக ஆட்சி காலகட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

    திமுகவில் இருந்து 2013-ம் ஆண்டு விலகி அதிமுகவில் இணைந்தார். தற்போது டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்தார். அவரது திடீர் மறைவு அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ParithiIlamvazhuthi 
    Next Story
    ×