search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்து விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விழுப்புரம்:

    அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம் மத்திய, தெற்கு மாவட்டங்கள் சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், ராதாமணி, மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட தளபதி நற்பணி மன்ற தலைவர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் தனசேகரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் சபாராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், முத்துகுமார், அவைத்தலைவர் நந்த கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாவாடை குழந்தைசாமி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர்கள் வக்கீல் அருள்குமார், சிங்காரவேல் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.
    Next Story
    ×