search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் வி‌ஷம் குடித்த விவசாயி
    X

    திண்டுக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் வி‌ஷம் குடித்த விவசாயி

    திண்டுக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை ஈ.பி.காலனியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி டெய்சிராணி. இவர்களுக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தில் வீடுகட்டியுள்ளனர். கணவரின் சகோதரர் தேவராஜ் என்பவர் தேவைக்காக அதேபகுதியை சேர்ந்த சிலரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி இருந்தனர்.

    அதற்கு மாதந்தோறும் வட்டி கொடுத்து வந்த நிலையில் மேலும் ரூ.50 லட்சம் கொடுத்தால்தான் வீட்டு பத்திரத்தை திருப்பித்தர முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்து கலெக்டரிடம் மனுஅளிக்க அறிவுறுத்தினர். அதன்பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்காத தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமதுரை காந்திசிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

    இருந்தபோதும் பிரச்சினை தீராததால் சேகர் கடும் மனஉளைச்சலில் இருந்தார். இன்று வீட்டிலேயே வி‌ஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்து அவரது மனைவி டெய்சிராணி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய சேகரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×