search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடருவோம்- மு.க.ஸ்டாலின்
    X

    நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடருவோம்- மு.க.ஸ்டாலின்

    நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு அனுமதிக்காவிட்டால் வழக்கு தொடரப்போவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #CoalImportScam
    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    இந்நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அப்பாவி மக்களின் தலையில் மின்கட்டண உயர்வை சுமத்திவிட்டு, நிலக்கரி இறக்குமதியில் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய மெகா ஊழல் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணைக்கு அனுமதி மறுத்தால், தி.மு.கழகமே நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.

    2012-2016 வரையிலான நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள மெகா ஊழலுக்கு காரணம், அப்போதைய மின்வாரிய தலைவர் ஞானதேசிகன் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். இவர்கள் செய்த தவறை மூடி மறைத்து மேற்கொண்டு ஊழல் செய்து வரும் மின்துறை அமைச்சர் பி. தங்கமணியின் கூட்டு சதியும் காரணம்.

    இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். #CoalImportScam #MKStallin
    Next Story
    ×